மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் அறைகள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும் - சத்யபிரதசாகு பேட்டி + "||" + Will be cleaned once in 2 hours - SatyabrataSahoo interview

வாக்கு எண்ணும் அறைகள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும் - சத்யபிரதசாகு பேட்டி

வாக்கு எண்ணும் அறைகள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும் - சத்யபிரதசாகு பேட்டி
வாக்கு எண்ணும் அறைகள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும் என சத்யபிரதசாகு கூறினார்.
சென்னை, 

வாக்கு எண்ணும் அறைகள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களில் 35 ஆயிரத்து 836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் சத்யபிரதசாகு கூறினார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்க இருக்கிறது.

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்பாக தேர்தல் அலுவலர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தியிருக்கிறோம். எல்லாம் தயார் நிலையில் இருக்கிறது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 10 பொது பார்வையாளர்கள் கொரோனா காரணமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 6 தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர்களுக்கு பதில் மாற்று தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரத்து 622 சி.ஏ. பி.எப். போலீசாரும் (துணை ராணுவம்), தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 5 ஆயிரத்து 154 பேரும், தமிழக காவல்துறையினர் 25 ஆயிரத்து 59 பேரும் என 35 ஆயிரத்து 836 போலீசார் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வாக்கு எண்ணும் அறைகள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும்.

தேர்தல் முடிவுகளை www.results.eci.gov.in www.election.tn.gov.in என்ற இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.