தேசிய செய்திகள்

கேரளாவில் மேலும் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Kerala Coronavirus Update on today date 1st May

கேரளாவில் மேலும் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கேரளாவில் மேலும் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் நேற்று ஒரேநாளில் 35 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தொடர்பான நேற்றைய தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

அதன்படி, கேரளாவில் நேற்று ஒரேநாளில் 35 ஆயிரத்து 636 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 6 ஆயிரத்து 819 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 828 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 15 ஆயிரத்து 493 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 12 லட்சத்து 77 ஆயிரத்து 294 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தாக்குதலுக்கு மேலும் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் இன்று 63,282 பேருக்கு கொரோனா பாதிப்பு - 802 பேர் பலி
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 63 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. அந்தியூர், சிவகிரி பகுதியில் வங்கி ஊழியர்- 2 அரசு அதிகாரிகள் உள்பட 20 பேருக்கு கொரோனா
அந்தியூர், சிவகிரி பகுதியில் வங்கி ஊழியர், 2 அரசு அதிகாரிகள் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
3. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,919- பேருக்கு கொரோனா
மாராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,919- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் - விஞ்ஞானிகள் குழு கணிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
5. ஏப்ரல் 30: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.