தேசிய செய்திகள்

டெல்லியில் மேலும் 25,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 412 பேர் பலி + "||" + 412 Covid-19 deaths in 24 hours Delhi records its highest daily toll

டெல்லியில் மேலும் 25,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 412 பேர் பலி

டெல்லியில் மேலும் 25,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 412 பேர் பலி
தலைநகர் டெல்லியில் நேற்று ஒரேநாளில் 25 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கொரோனா தனது கோர முகத்தை காட்டி வருகிறது. அங்கு கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சமடைந்து வருகிறது. இந்நிலையில், நேற்றைய (மே 1) கொரோனா பாதிப்பு விவரத்தை டெல்லி அரசு வெளியிட்டது.

அதன்படி, டெல்லியில் நேற்று ஒரேநாளில் 25 ஆயிரத்து 219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 74 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 97 ஆயிரத்து 747 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து டெல்லியில் மேலும் 27 ஆயிரத்து 421 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 61 ஆயிரத்து 246 ஆக அதிகரித்துள்ளது. 

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு புதிய உச்சமாக மேலும் 412 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தலைநகர் டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 35 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கேரளாவில் நேற்று ஒரேநாளில் 35 ஆயிரத்து 636 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. மராட்டியத்தில் இன்று 63,282 பேருக்கு கொரோனா பாதிப்பு - 802 பேர் பலி
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 63 ஆயிரத்து 282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. அந்தியூர், சிவகிரி பகுதியில் வங்கி ஊழியர்- 2 அரசு அதிகாரிகள் உள்பட 20 பேருக்கு கொரோனா
அந்தியூர், சிவகிரி பகுதியில் வங்கி ஊழியர், 2 அரசு அதிகாரிகள் உள்பட 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
4. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,919- பேருக்கு கொரோனா
மாராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,919- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் - விஞ்ஞானிகள் குழு கணிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை