தேசிய செய்திகள்

டெல்லி: கொரோனா வார்டில் பணியாற்றிய வந்த மருத்துவர் தற்கொலை + "||" + Doctor Working In Delhi Hospital's Covid Ward Dies By Suicide

டெல்லி: கொரோனா வார்டில் பணியாற்றிய வந்த மருத்துவர் தற்கொலை

டெல்லி: கொரோனா வார்டில் பணியாற்றிய வந்த மருத்துவர் தற்கொலை
டெல்லியில் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த மருத்துவர் தற்கொலை செய்துகொண்டார்.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது. நாட்டின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை வசதி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவின் கோர 2-வது அலைக்கு பாதிப்பு அதிகமடைந்து வருகிறது. அங்கு உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மக்கள் சொந்தமாக ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு வர வேண்டும் என சில மருத்துவமனைகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் விவேக் ராய் என்ற மருத்துவர் பணியாற்றி வந்தார். அவர் நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் கடுமையான மன அழுத்ததில் இருந்த மருத்துவர் விவேக் ராய் தற்கொலை செய்துகொண்டதாக இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, இந்திய மருத்துவ கவுண்சில் முன்னாள் தலைவர் ரவி வாங்கர் டுவிட்டரில் கூறுகையில், உத்தரபிரதேசதின் கோரக்பூரை சேந்த சிறந்த மருத்துவர் விவேக் ராய். இந்த பெருந்தொற்று காலத்தில் அவர் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளார். 

இந்த வெறுப்புணர்வு நிறைந்த சூழ்நிலையில் விவேக் ராய் தனது கண்காணிப்பில் உயிரிழந்த கொரோனா நோயாளிகளை நினைத்து அந்த துன்பங்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் வாழ்வதை விட தனது சொந்த வாழ்க்கையை முடித்துக்கொள்வது போன்ற கடினமான முடிவை எடுத்தார்’.

கொரோனா நெருக்கடியை நிர்வகிக்கும் போது மிகப்பெரிய உணர்ச்சிகரமான அழுத்தத்தை கவனத்திற்கு கொண்டுவருகிறது. தடுப்பாடுடைய மருத்துவ வசதிகளால் உருவாக்கப்பட்ட வெறுப்புணர்வால் நிர்வாக கட்டமைப்பு செய்த கொலை தான் இந்த இளம் மருத்துவரின் மரணம். மோசமான அறிவியல், மோசமான அரசியல், மோசமான நிர்வாகம்’ என்றார்.

 தற்கொலை செய்துகொண்ட மருத்துவர் விவேக் ராய்க்கு கடந்த வருடம் தான் திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி 2 மாதங்கள் கர்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி- தமிழக அரசு
முழு ஊரடங்கு அமலாக இருப்பதால் இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. ஆந்திரா: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள குவிந்த மக்கள்... தடுப்பூசி மையத்தில் தள்ளுமுள்ளு
ஆந்திராவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மக்கள் குவிந்தனர். இதனால், தடுப்பூசி மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
3. கர்நாடகாவில் இன்று 48 ஆயிரம் பேருக்கு கொரோனா - 28 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்
கர்நாடகாவில் இன்று 48 ஆயிரத்து 781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மராட்டியத்தில் இன்று 54,022 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று 54 ஆயிரத்து 22 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.
5. கேரளாவில் நேற்றை விட இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைவு
கேரளாவில் இன்று ஒரேநாளில் 38 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.