உலக செய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 15.27 கோடியாக உயர்வு + "||" + World Wide Coronavirus Update as on Today

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 15.27 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 15.27 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 15 கோடியே 27 லட்சமாக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆணடு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் அலை நிறைவடைந்த நிலையில் பல நாடுகளில் வைரசின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை புரட்டி எடுத்து வருகிறது. 

வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் 15 கோடியே 27 ஆயிரத்து 88 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 95 லட்சத்து 13 ஆயிரத்து 840 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 13 கோடியே 69 ஆயிரத்து 129 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 32 லட்சத்து 5 ஆயிரத்து 786 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்,

அமெரிக்கா - 3,31,46,008
இந்தியா - 1,91,64,969
பிரேசில் - 1,47,25,975
பிரான்ஸ் - 56,42,359
துருக்கி - 48,49,408

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் புதிதாக 691 பேருக்கு கொரோனா தொற்று; ஈரோட்டில் முதியவர் பலி
மாவட்டத்தில் நேற்று புதிதாக 691 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் ஈரோட்டில் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.
2. இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா இலங்கையிலும் பரவியது
இந்தியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா (பி.1.617) வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
3. ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 779 பேருக்கு கொரோனா; பெண் பலி
ஈரோடு மாவட்டத்தில் புதிய உச்சமாக 779 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.
4. இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி- தமிழக அரசு
முழு ஊரடங்கு அமலாக இருப்பதால் இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
5. ஆந்திரா: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள குவிந்த மக்கள்... தடுப்பூசி மையத்தில் தள்ளுமுள்ளு
ஆந்திராவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் மக்கள் குவிந்தனர். இதனால், தடுப்பூசி மையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.