மாநில செய்திகள்

கொரோனா பாதிப்பு: கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றம் + "||" + Corona vulnerability: Kolathur constituency election officer change

கொரோனா பாதிப்பு: கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றம்

கொரோனா பாதிப்பு: கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றம்
கொரோனா பாதிப்பு காரணமாக கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை,

சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. அதே போல் புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம், அசாம் மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு அலுவலர்களுக்கு மட்டுமே தபால் வாக்கு அளிக்கும் வசதி இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த முறை தபால் வாக்கு முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி 75 மையங்களில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார். கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய அதிகாரியாக கண்ணன் அங்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா: கிரிக்கெட் வீரர் அஸ்வின் மனைவி
4 குழந்தைகள் உள்பட குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என கிரிக்கெட் வீரர் அஸ்வினின் மனைவி தெரிவித்து உள்ளார்.
2. இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 4.01 லட்சம் பதிவு
இந்தியாவில் ஒரே நாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
3. பீகார் தலைமை செயலாளர் கொரோனா பாதிப்புக்கு பலி
பீகார் தலைமை செயலாளர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்து உள்ளார்.
4. இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்
இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி கொரோனா பாதிப்பினால் இன்று காலமானார்.
5. கொரோனா பாதிப்பு: துபாய் சாலைகளில் டிஜிட்டல் விளம்பர பலகைகளில், இந்தியாவுக்கு ஆதரவான வாசகம்
கொரோனா பாதிப்பால் திணறி வரும் இந்தியாவுக்கு ஆதரவாக துபாய் சாலைகளில் உள்ள டிஜிட்டல் விளம்பர பலகைகளில் (#ஸ்டே ஸ்ட்ராங் இந்தியா) என வாசகம் எழுதப்பட்டுள்ளது.