தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம் ; பாஜக- திரிணாமூல் காங். இடையே கடும் போட்டி + "||" + West Bengal Election Results 2021 Live Updates: Cliffhanger in Bengal shows early postal ballot trends

மேற்கு வங்காளம் ; பாஜக- திரிணாமூல் காங். இடையே கடும் போட்டி

மேற்கு வங்காளம் ; பாஜக- திரிணாமூல் காங். இடையே கடும் போட்டி
மேற்கு வங்காளத்தில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.
கொல்கத்தா, 

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதனால் 2 மாதங்களுக்கு மேலாக மாநில தேர்தல் களம் மிகவும் கொதிநிலையில் இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலை விட அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் அனல் பறந்தது. இதனால் அரசியல் மோதல்கள், வன்முறைகள், தாக்குதல்கள் என பதற்றத்துக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டன.

இப்படி 2 மாதங்களுக்கு மேலாக மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன.  அங்கு வேட்பாளர் மரணத்தால் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே மீதமுள்ள 292 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறியது. தற்போதைய நிலவரத்தின் படி திரிணாமூல் காங்கிரஸ் 87  இடங்களிலும் பாஜக 86 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளம்; ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரம்- பாஜக- திரிணாமூல் காங். இடையே கடும் போட்டி
மேற்கு வங்காளத்தில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.
2. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் - பாஜக தேர்தல் அறிக்கை
மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. சில துரோகிகளும், பேராசை கொண்டவர்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்; மம்தா பானர்ஜி
சில துரோகிகளும், பேராசை கொண்டவர்களும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர் என மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
4. பாஜக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
முதற்கட்டமாக 6 வேட்பாளர்களின் பட்டியல் வெளியான நிலையில், தற்போது பாஜகவின் 2ம் கட்ட வேட்பாளார் பட்டியலை செளியிட்டுள்ளது.
5. பாஜக இந்த முறை இரட்டை இலக்கில் வெற்றி பெறுவது உறுதி - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்
பாஜக இந்த முறை இரட்டை இலக்கில் வெற்றி பெறுவது உறுதி என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.