தேசிய செய்திகள்

ஆக்சிஜன், மருந்துகள் குறித்து ஆய்வு: பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை + "||" + Modi meeting at 9:30 am to check on oxygen, medicines

ஆக்சிஜன், மருந்துகள் குறித்து ஆய்வு: பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை

ஆக்சிஜன், மருந்துகள் குறித்து ஆய்வு: பிரதமர் மோடி இன்று காலை ஆலோசனை
ஆக்சிஜன், மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 9:30 மணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவில் பேரழிவான கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் நேற்று முதன்முறையாக 400,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வழக்குகள் பதிவானது. 

 இந்த சூழலில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட மருந்துகள், ஆக்சிஜன் உதவி கிடைக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது. இவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் ஆக்சிஜன், மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இதன்படி பிரதமர் மோடி இன்று காலை 9:30 மணிக்கு நிபுணர்களை சந்தித்து ஆக்சிஜன் மற்றும் மருந்து கிடைப்பது குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

 மேலும் கொரோனா தொற்றுநோய் தொடர்பாக மனிதவள நிலைமை மற்றும் அதை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் பிரதமர் மோடி மதிப்பாய்வு செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை, கோவை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்ய ஏற்பாடு
தமிழகத்தில் மதுரை, கோவை, நெல்லை, சேலம், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் ‘ரெம்டெசிவிர்’ மருந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2. முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நந்தம்பாக்கத்தில் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தில் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நந்தம்பாக்கத்தில் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையத்தில் மு.க.ஸ்டாலின் நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
3. ஸ்டெர்லைட் ஆலையில் கலெக்டர் தலைமையிலான குழு ஆய்வு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கலெக்டர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
4. ஆக்சிஜன், படுக்கை, டாக்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல்
ஆக்சிஜன், படுக்கை மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக சமூக வலைதளங்களில் உதவி கேட்டு பதிவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
5. ஆக்சிஜன் உற்பத்திக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் அனுமதி: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் மறியல்
ஆக்சிஜன் உற்பத்திக்கு அனைத்து கட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். ஆலை அருகே போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.