சட்டசபை தேர்தல் - 2021

தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எஸ்.பி.வேலுமணி, முன்னிலை + "||" + Tamil Nadu Assembly election: Edappadi Palanisamy O. Panneerselvam SB Velumani lead

தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எஸ்.பி.வேலுமணி, முன்னிலை

தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை: எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எஸ்.பி.வேலுமணி, முன்னிலை
தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் தொடங்கியது. முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது.
சென்னை

234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், முக்கியத் தொகுதிகளின் முன்னிலை நிலவரம். வருமாறு:-

* திருச்சுழி தொகுதி முதல் சுற்றில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு முன்னிலை!

* தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை!

* போடிநாயக்கனூர் தொகுதி முதல் சுற்றில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை!

* எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை!

* திருச்செந்தூர் தொகுதி முதல் சுற்றில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலை!

* முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜனதா  வேட்பாளர்  குஷ்பு பின்னடைவு

* பல்லடம் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் முன்னிலை!

* முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சேப்பாக்கம் திமுக  வேட்பாளர்  உதயநிதி  ஸ்டாலின் முன்னிலை

* முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர்  திமுக  வேட்பாளர்  மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்

* பூந்தமல்லி தொகுதி முதல் சுற்றில் திமுக முன்னிலை - வித்தியாசம் 2862

* செங்கல்பட்டு தொகுதி முதல் சுற்று நிலவரம்: திமுக வேட்பாளர் முன்னிலை - வித்தியாசம் 1415

* திருத்தணி சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை - வித்தியாசம் 1520

*  பல்லடம், நிலைக்கோட்டை தொகுதிகளில் மூன்றாம் இடத்தில் நாம் தமிழர் கட்சி!

தொடர்புடைய செய்திகள்

1. சசிகலா அடிப்படை உறுப்பினர் கூட இல்லை,எப்படி அ.தி.மு.க.வை சொந்தம் கொண்டாட முடியும்? -ஜெயக்குமார்
அதிமுகவை வளர்ச்சியை பார்த்து சசிகலாவால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆடியோ வெளியிடுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
2. “ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக அதிமுக செயல்படும்” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக அதிமுக செயல்படும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
3. புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு
தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
4. கொரோனா தடுப்பு பணிக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி
முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடியும், கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் நிதியுதவியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.