சட்டசபை தேர்தல் - 2021

மேற்கு வங்காளம்; திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை + "||" + Trinamool Ahead In Bengal,

மேற்கு வங்காளம்; திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை

மேற்கு வங்காளம்; திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை
மேற்கு வங்காளம் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கொல்கத்தா, 

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதனால் 2 மாதங்களுக்கு மேலாக மாநில தேர்தல் களம் மிகவும் கொதிநிலையில் இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலை விட அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் அனல் பறந்தது. இதனால் அரசியல் மோதல்கள், வன்முறைகள், தாக்குதல்கள் என பதற்றத்துக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டன.

இப்படி 2 மாதங்களுக்கு மேலாக மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன.  அங்கு வேட்பாளர் மரணத்தால் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே மீதமுள்ள 292 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறியது. தற்போதைய நிலவரத்தின் படி திரிணாமூல் காங்கிரஸ் 148  இடங்களிலும் பாஜக 115 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. சிபிஎம் 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. மே.வங்காளம்: திரிணாமூல் காங்.- 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை, தொண்டர்கள் கொண்டாட்டம்
மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
2. மேற்கு வங்காளம்: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு
மேற்கு வங்காளத்தில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி முன்னிலை வகிக்கிறார்.
3. கேரளா சட்டமன்ற தேர்தல்: பாலக்காடு தொகுதியில் மெட்ரோமேன் ஸ்ரீதரன் முன்னிலை
கேரள சட்டமன்ற தேர்தலில் சிபிஎம் தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
4. மேற்கு வங்காளம் ; பாஜக- திரிணாமூல் காங். இடையே கடும் போட்டி
மேற்கு வங்காளத்தில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.
5. மேற்கு வங்காளம்; ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரம்- பாஜக- திரிணாமூல் காங். இடையே கடும் போட்டி
மேற்கு வங்காளத்தில் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவது தெரியவந்துள்ளது.