சட்டசபை தேர்தல் - 2021

மேற்கு வங்காளம்: திரிணாமூல் காங். 170 இடங்களில் முன்னிலை + "||" + TMC Past Halfway Mark

மேற்கு வங்காளம்: திரிணாமூல் காங். 170 இடங்களில் முன்னிலை

மேற்கு வங்காளம்: திரிணாமூல் காங். 170 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்காளம் திரிணாமூல் காங்கிரஸ் பாதிக்கும் மேலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கொல்கத்தா,

294 உறுப்பினர் கொண்ட மேற்கு வங்காள சட்டசபைக்கு கடந்த மார்ச் 27-ந் தேதி முதல் கடந்த 29-ந் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதனால் 2 மாதங்களுக்கு மேலாக மாநில தேர்தல் களம் மிகவும் கொதிநிலையில் இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலை விட அரசியல் தலைவர்களின் பேச்சுகளில் அனல் பறந்தது. இதனால் அரசியல் மோதல்கள், வன்முறைகள், தாக்குதல்கள் என பதற்றத்துக்கு பஞ்சமில்லாமல் காணப்பட்டன.

இப்படி 2 மாதங்களுக்கு மேலாக மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்பட்டன.  அங்கு வேட்பாளர் மரணத்தால் 2 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. எனவே மீதமுள்ள 292 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் ஆரம்ப கட்ட நிலவரங்களில் பாஜக- திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. நிமிடத்துக்கு நிமிடம் முன்னிலை நிலவரம் மாறியது.  பின்னர் நேரம் செல்ல செல்ல திரிணாமூல் காங்கிரஸ் பாதிக்கும் மேலான இடங்களில் முன்னிலை  வகிக்கத்தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலவரத்தின் படி திரிணாமூல் காங்கிரஸ் 170 இடங்களிலும் பாஜக 114 -இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் ஆட்சியை தக்க வைப்பாரா, மம்தா பானர்ஜி?
மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (ஞயாற்றுக்கிழமை) எண்ணப்படுகின்றன.
2. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 17,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 17,411 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. மே.வங்கத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து
மேற்கு வங்காளத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4. மேற்கு வங்காளத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான 8-வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
5. மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 17,207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 17,207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.