மாநில செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை + "||" + Tamil Nadu Assembly Election: Coimbatore South Leader Kamal Haasan leads

தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை

தமிழக சட்டமன்ற தேர்தல்: கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருகிறார்.
கோவை, 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்படி தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதன்படி கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 11,325 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். அவரைத்தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 10,952 வாக்குகளும், பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் 7,651 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக சட்டமன்ற தேர்தல்: தொடர்ந்து பின்னடைவை சந்திக்கும் வி.ஐ.பி வேட்பாளர்கள்!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், வி.ஐ.பி வேட்பாளர்கள் பலர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.
2. தமிழக சட்டமன்ற தேர்தல்: 5 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது 5 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது.
3. தமிழக சட்டமன்ற தேர்தல்: முதலமைச்சர் பழனிசாமி 26,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி 26,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.
4. தமிழக சட்டமன்ற தேர்தல்: சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார்.
5. தமிழகத்தில் அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவு
முதலமைச்சர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் 85.6% வாக்குகள் பதிவாகியுள்ளன