சட்டசபை தேர்தல் - 2021

மேற்கு வங்காளம்: திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை, மம்தா பின்னடைவு + "||" + West Bengal election result LIVE: TMC leads in 185; BJP in 97; Left in none

மேற்கு வங்காளம்: திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை, மம்தா பின்னடைவு

மேற்கு வங்காளம்: திரிணாமூல் காங். அதிக இடங்களில் முன்னிலை, மம்தா பின்னடைவு
மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.
கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபைக்கு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது.  

திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆரம்ப கட்ட முன்னிலை நிலவரங்களின் படி நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகரி சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். 

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதாவது, 170 இடங்களில் திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 95 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி முகம் காட்டினாலும் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்து இருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கண்டனம்: சென்னை ஐகோர்ட்டு கருத்துக்கு மம்தா பானர்ஜி வரவேற்பு; மத்திய படைகளை திரும்பப்பெறவும் வலியுறுத்தல்
கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை ஐகோர்ட்டின் கருத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார்.
2. மே.வங்காளத்திற்கு வந்துகொண்டிருந்த ஆக்சிஜன் விநியோகம் உ.பிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது - மம்தா குற்றச்சாட்டு
மேற்குவங்காளத்திற்கு வந்துகொண்டிருந்த ஆக்சிஜன் விநியோகம் உத்தரபிரதேசத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
3. ‘பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்’ மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு, பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி கூறினார்.
4. மம்தா பானர்ஜி தேர்தல் வன்முறையை தூண்டுகிறார் : அமித்ஷா குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள உள்துறை மந்திரி அமித் ஷா, இன்று பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
5. எதிர்காலத்தில் டெல்லியிலும் வெல்வேன்; மேற்கு வங்காளத்தில் ஒற்றைக்கால் கொண்டே வெற்றி பெறுவேன்; மம்தா பானர்ஜி நம்பிக்கை
மேற்கு வங்காளத்தில் ஒற்றைக்காலிலேயே வெற்றி பெறுவேன் என மம்தா பானர்ஜி நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.