சட்டசபை தேர்தல் - 2021

கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு + "||" + Kerala Assembly Polls: LDF set to sweep Kerala, leads in 92 seats...

கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு

கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு
கேரளாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியான இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திருவனந்தபுரம்,

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவியது. பாஜக தனித்து போட்டியிட்டது.

கேரளாவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில், இந்த முறை பாஜகவும் களமிறங்கியுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இடதுசாரி கூட்டணி முன்னிலை பெற்றது. தற்போதைய நிலவரப்படி, 89 இடங்களில் இடதுசாரி கூட்டணியும், 45 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் , பாஜக 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதையே இந்த முன்னிலை நிலவரம் காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கேரள சட்ட சபை தேர்தல் முடிவுகள்; திருச்சூர் தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி முன்னிலை
கேரளவில் திருச்சூர்தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி முன்னிலை வகித்து வருகிறார்.
2. மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
மேற்கு வங்காள பா.ஜனதா தலைவர் திலீப் கோசுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
3. கட்சியை விட தேசம் பெரிது: பாஜக நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பேச்சு
பாஜக தேசிய நலனை பிரதிநிதித்துவப்படுத்துவது மட்டுமல்லாமல், பிராந்திய நலனிலும் அக்கறைக் கொண்ட கட்சியும் ஆகும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
4. மராட்டியத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த பாஜக கடும் எதிர்ப்பு
ஊரடங்கை அமல்படுத்த அதிக பொருளாதார பாதிப்பை சந்திக்காத வகையில் திட்டத்தை தயாரித்து தருமாறு அதிகாரிகளுக்கு உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.
5. கேரள சட்டமன்ற தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்டது கேரள காங்கிரஸ்
கேரளாவில் 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்துக்கு தேர்தலுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.