சட்டசபை தேர்தல் - 2021

அசாமில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக ? + "||" + Super Victory For Trinamool; DMK Wins; Left In Kerala; BJP In Assam

அசாமில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக ?

அசாமில் ஆட்சியை தக்க வைக்கிறது  பாஜக ?
அசாம் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கவுகாத்தி

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது. சில மணி நேரத்தில் பாஜக 83 இடங்களிலும் காங்கிரஸ் 42 இடங்களிலும் கண பரிசத் கட்சி 1 இடங்களிலும் முன்னிலை பெற்றன.

தற்போதைய நிலவரப்படி ஆட்சியமைக்க தேவையான 64 இடங்களை விட கூடுதல் இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. பாஜக கூட்டணி 80 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதையே இந்த முன்னிலை நிலவரம் காட்டுகிறது.

சிஏஏ உள்ளிட்ட சட்டங்களால் கடும் எதிர்ப்பு எழுந்தநிலையில் ஆளும் பாஜகவுக்கு தேர்தலில் கடும் சவால் ஏற்பட்டது. எனினும்  பாஜக முன்னிலை பெற்று ஆட்சியை தக்க வைக்க உள்ளதையே முன்னிலை நிலவரங்கள் காட்டுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக அரசின் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் சண்முகம்
தமிழக அரசின் ஆலோசர் பதவியை சண்முகம் ராஜினாமா செய்துள்ளார்.
2. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்தனர்.
3. கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு
கேரளாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியான இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
4. கேரள சட்ட சபை தேர்தல் முடிவுகள்; திருச்சூர் தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி முன்னிலை
கேரளவில் திருச்சூர்தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி முன்னிலை வகித்து வருகிறார்.
5. அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும்: சர்பானந்த சோனாவால் நம்பிக்கை
அசாமில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என மாநில முதல் மந்திரியும் பாஜக தலைவருமான சர்பானந்த சோனாவால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.