மாநில செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல் : முன்னிலையில் 16 அமைச்சர்கள்; பின்னடைவை சந்திக்கும் 11 அமைச்சர்கள் + "||" + Tamil Nadu Assembly Election: Presence 16 ministers;11 ministers facing setbacks

தமிழக சட்டசபை தேர்தல் : முன்னிலையில் 16 அமைச்சர்கள்; பின்னடைவை சந்திக்கும் 11 அமைச்சர்கள்

தமிழக சட்டசபை தேர்தல் : முன்னிலையில் 16 அமைச்சர்கள்; பின்னடைவை சந்திக்கும் 11 அமைச்சர்கள்
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக அமைச்சர்களில் 11 பேர் தோல்வி முகத்தில் உள்ளனர்.
சென்னை

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக அமைச்சர்களில் 11 பேர் தோல்வி முகத்தில் உள்ளனர். 16 அமைச்சர்கள் தங்கள் இருப்பைத் தக்கவைத்துள்ளனர்.

சட்டசபிதேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன திமுகவில் துரைமுருகன் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

அதேபோல் அதிமுகவில் தோல்வியே காணாத அமைச்சர் சி.வி.சண்முகம் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். தொகுதியை மாற்றிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும், திமுகவுக்குக் கடும் சவாலாக இருந்த அமைச்சர் ஜெயக்குமாரும் பின்தங்கியுள்ளனர். பாண்டியராஜன், பெஞ்சமின், வெல்லமண்டி நடராஜன், சி.வி.சண்முகம், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ராஜலட்சுமி உள்ளிட்ட அமைச்சர்கள் பின்தங்கியுள்ளனர். திண்டுக்கல் தொகுதியில் சீனிவாசன் வெற்றியும் இழுபறியில் உள்ளது. தற்போதுள்ள அமைச்சர்களில் 11 பேர் பின்தங்கியுள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வம்  தொகுதி இழுபறியில் உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்டோரும் தோல்வி முகத்தில் உள்ளனர். மற்ற அமைச்சர்கள் முன்னிலையில் உள்ளனர்.

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நோக்கிச் செல்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழு விவரம்
தமிழக சட்டசபை தேர்தல் மதியம் ஒரு மணிவரை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வ முழுவிவரம்
2. சேலம் மாவட்டம் 11 சட்டசபை தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
3. துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் முன்னிலை
துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் முன்னிலை பெற்றார்.
4. சட்டசபை தேர்தல் ஓ.பன்னீர் செல்வம் உள்பட 5 அமைச்சர்கள் பின்னடைவு
சட்டசபை தேர்தல் திமுக கூட்டணி 133 இடங்களிலும், அதிமுக கூட்டணி 99 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன
5. சட்டசபை தேர்தல்: திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102 இடங்களிலும் முன்னிலை
சட்டசபை தேர்தல் திமுக கூட்டணி 129 இடங்களிலும், அதிமுக கூட்டணி 102இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன