தேசிய செய்திகள்

வெற்றி கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும்: தலைமைச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு + "||" + suspend concerned SHO and report action taken immediately of each such incidence: ECI

வெற்றி கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும்: தலைமைச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

வெற்றி கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும்: தலைமைச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
வெற்றி கொண்டாட்டங்களை தடை செய்ய வேண்டும் என தலைமைச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னிலை நிலவரங்கள் தெரியவந்துள்ளன. 

தமிழகத்தில் திமுகவும், மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், கேரளத்தில் இடதுசாரி முன்னணி, அசாமில் பாஜக, புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் முன்னணியில் இருந்து வருகின்றன. இதையடுத்து மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் முன்னணியில் உள்ள கட்சியின் தொண்டர்கள் தேர்தல் வெற்றியை கொண்டாட பொது இடங்களில் கூடி வருகின்றனர்.

இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தை உடனடியாக தடை செய்ய உத்தரவிட வேண்டும் என தேர்தல் நடைபெறும்  மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அவசர கடிதம் அனுப்பியுள்ளது. அதில் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்காக கூடுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.