மாநில செய்திகள்

திமுக தலைமையகம் அமைந்துள்ள தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம் + "||" + Denampet Police Inspector Murali suspended

திமுக தலைமையகம் அமைந்துள்ள தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்

திமுக தலைமையகம் அமைந்துள்ள தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம்
தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததால் இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இன்று காலை முதல் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியது. இதில், தற்போதைய நிலவரப்படி, திமுக 148 இடங்களிலும், அதிமுக 85 இடங்களிலும், மநீம ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

இதனையடுத்து, இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், திமுகவினர், தற்போது இருந்தே தங்களது வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்,தேனாம்பேட்டையில், தடையை மீறி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதை தடுக்க தவறியதாக காவல் ஆய்வாளர் முரளி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் படி கொரோனா விதிமுறைகளை சரிவர பின்பற்றாததால் நடவடிக்கை தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமைதியான முறையில் வெற்றியை கொண்டாடுமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.