மாநில செய்திகள்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து + "||" + Congratulations to DMK leader, Thiru @mkstalin Rajnath Singh

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் திமுக கூட்டணி உள்ளது. தற்போது திமுக மட்டும் 119 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி தற்போது 157 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் திமுக ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது.

இந்நிலையில், மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் க்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.