தேசிய செய்திகள்

மேற்குவங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் முன்னிலை + "||" + Trinamool congress Leads 215 Seats in West Bengal Elections

மேற்குவங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் முன்னிலை

மேற்குவங்காளம்: திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் முன்னிலை
மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 215 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். 292 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது.

அதில், 215 தொகுதிகளில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணி 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரிகள் எந்த தொகுதியிலும் முன்னிலையில் இல்லை. மற்றவை 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. 

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காளத்தில் 2 தொகுதிகளில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. மேற்குவங்காளம்: நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி பின்னடைவு
நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலையில் உள்ளார்.
2. மேற்குவங்காள சட்டசபை தேர்தல் - மதியம் 1.32 மணி வாக்குப்பதிவு 55.12%
மேற்குவங்காளத்தில் இன்று 7-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
3. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி மக்கள் வாக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடி வேண்டுகோள்
மேற்குவங்காளத்தில் 7-ம் கட்டமாக 34 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
4. மேற்குவங்காளத்தில் 6-ம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்
மேற்குவங்காளத்தில் 43 தொகுதிகளுக்கு இன்று 6-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
5. மேற்குவங்காளம்: பாஜக பிரசார அலுவலகம் மீது குண்டு வீச்சு
மேற்குவங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாஜக கட்சியின் பிரசார அலுவலகம் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடைபெற்றுள்ளது.