மாநில செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து + "||" + Congratulations to Shri MK Stalin for the victory Rahul Gandhi

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல்காந்தி வாழ்த்து
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே முன்னிலையில், இருந்து வருகிற நிலையில், தற்போது திமுக 156 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிற நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் தனது டுவீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். 

வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர். உங்கள் தலைமையின் கீழ் மக்களின் நம்பிக்கையை நாங்கள் பூர்த்தி செய்வோம். உங்களுக்கு எனது வாழ்த்துகள்'' எனக் கூறியுள்ளார்.