மாநில செய்திகள்

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் எகிறும் பரவல்: ஒரே நாளில் 153 பேர் கொரோனாவுக்கு பலி + "||" + Tamil Nadu reports 20,768 new COVID-19 cases

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் எகிறும் பரவல்: ஒரே நாளில் 153 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் மின்னல் வேகத்தில் எகிறும் பரவல்: ஒரே நாளில் 153 பேர் கொரோனாவுக்கு பலி
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவல் எகிறுகிறது. ஒரே நாளில் 20,768 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 153 பேர் பலியாகி உள்ளனர்.
சென்னை, 

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் புதிதாக 20 ஆயிரத்து 768  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,07,112 ஆக உயர்ந்துள்ளது. இன்று 17,576 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 10,72,322 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 153 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 14,346 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 6,078 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,45,966 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.