மாநில செய்திகள்

தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து + "||" + Congratulations to Thiru MK Stalin and DMK for the victory in the Tamil Nadu assembly elections PM Narendra Modi

தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத்த தேர்தலின் முடிவுகள் இன்று வெளியாகின.

தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 156 தொகுதிகளில் முன்னிலை பெற்று தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.

 இதனையடுத்து மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில்,

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். தேசத்தின் வளர்ச்சியையும், மாநிலத்தின் தேவைகளையும் கணக்கில் கொண்டு செயல்படுவோம். கொரோனாவை ஒழிக்க இணைந்து பாடுபடுவோம் என கூறியுள்ளார்.