தேசிய செய்திகள்

நந்திகிராம் தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தி.காங்கிரஸ் வேண்டுகோள் + "||" + Immediate re-counting of votes in Nandigram AC 210 and postal ballots Trinamool Congress writes Election Commission

நந்திகிராம் தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தி.காங்கிரஸ் வேண்டுகோள்

நந்திகிராம் தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தி.காங்கிரஸ் வேண்டுகோள்
நந்திகிராம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுகொள் விடுத்துள்ளது.
கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், அம்மாநில முதல்மந்திரியுமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிட்டார்.
 
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. அதில் நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மம்தா பானர்ஜியை விட 1,736 வாக்குகள் அதிகம்பெற்றார்.

இதன் மூலம் மேற்குவங்காள முதல்மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

இந்நிலையில், நந்திகிராம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், நந்திகிராமில் பதிவான தபால் வாக்குகளையும், நந்திகிராம் வாக்குச்சாவடி எண் 210-ல் பதிவான வாக்குகளையும் உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 3 முக்கிய தலைவர்கள் மாநில தேர்தல் ஆணையரை நேரடியாக சந்தித்து நந்திகிராம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

தொடர்புடைய செய்திகள்

1. நந்திகிராம் தொகுதியில் 1,736 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வி
நந்திகிராம் தொகுதியில் 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.
2. திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி: மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை உறுதி செய்துள்ளது.
3. நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை - திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்
நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
4. நந்திகிராம் மக்கள் அளிக்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் - மம்தா பானர்ஜி
நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார்.
5. நாங்கள் வெற்றிபெற்றுவிட்டோம்.... பாஜக தோல்வியடைந்துவிட்டது - மம்தா பானர்ஜி பேச்சு
நாங்கள் 221-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிபெற்றுவிட்டதாகவும், தேர்தலில் பாஜக தோல்வியடைந்துவிட்டதாகவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.