சட்டசபை தேர்தல் - 2021

தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் - பிரதமர் மோடி டுவிட் + "||" + PM Modi Thanked TN People for the Support in NDA Allience during Elections

தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் - பிரதமர் மோடி டுவிட்

தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் - பிரதமர் மோடி டுவிட்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி 160 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணி 74 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனை தொடர்ந்து முக ஸ்டாலினுக்கும், திமுக கூட்டணியினருக்கும் பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், வாக்களித்த மக்களுக்கும் அரசியல் கட்சியினர் நன்றி தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (அதிமுக கூட்டணி) ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி தான் தெரிவிப்பதாக பாஜக மூத்த தலைவரும், பிரதமருமான நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிகு தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களைப் பாராட்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.தொடர்புடைய செய்திகள்

1. 'களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன்’ - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
2. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா
மக்கள் நீதி மய்யம் கட்சியை சீரமைக்கும் விதமாக மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
3. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் விலகல்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன் இன்று விலகியுள்ளார்.
4. 'மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா பரவலை தடுத்திட உதவிட வேண்டும்'- முக ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொரோனா நோய் பரவலை தடுத்திட உதவிட வேண்டும் என்று முதலமைச்சராக பதவியேற்க உள்ள ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் - அதிமுக தலைமை அறிவிப்பு
தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் 7ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.