தேசிய செய்திகள்

புதுச்சேரியில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி + "||" + The National Democratic Alliance is gaining more seats in Pondicherry

புதுச்சேரியில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி

புதுச்சேரியில் அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி
புதுச்சேரியில் அதிக இடங்களை கைப்பற்றி உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.
புதுச்சேரி,

30 இடங்களை கொண்ட புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6ந்தேதி நடந்தது.  இதில் 81.70 சதவீத வாக்குகள் பதிவாகின.  இதனையடுத்து இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில், தொடக்கத்தில் இருந்தே அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது.  இரவு 10 மணி நிலவரப்படி, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

அதனுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. 3 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது.  3ல் முன்னிலை பெற்றுள்ளது.

புதுச்சேரியில் மற்றொரு கூட்டணியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள தி.மு.க. 3 இடங்களில் வெற்றியும், 3 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது.  காங்கிரஸ் 2 இடங்களை கைப்பற்றி உள்ளது.

இதனால், போதிய இடங்களை கைப்பற்றியுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு; 5 பேருக்கு காயம்
அமெரிக்காவில் நியூ ஆர்லியன்சில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.
2. சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
சென்னை அணிக்காக 200 போட்டிகள் விளையாடி உள்ளேன் என தெரிந்ததும் வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது என டோனி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
3. மேற்கு வங்காள 5வது கட்ட தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளருக்கு கொரோனா தொற்று
மேற்கு வங்காளத்தில் 5வது கட்ட சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
4. கொரோனா தடுப்பூசி; ஜப்பானில் முதன்முறையாக 30 வயது பெண்ணுக்கு பின்விளைவு
ஜப்பானில் முதன்முறையாக கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட 30 வயது பெண்ணுக்கு கடுமையான ஒவ்வாமை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
5. அமெரிக்காவில் பனிச்சரிவு: பனிச்சறுக்கு வீரர்களில் 4 பேர் பலி
அமெரிக்காவில் 9,300 அடி உயரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பனிச்சறுக்கு வீரர்களில் 4 பேர் பலியானார்கள்.