தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமருடன் நாளை ஆலோசனை + "||" + PM Modi will hold consultations with the UK PM tomorrow

பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமருடன் நாளை ஆலோசனை

பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமருடன் நாளை ஆலோசனை
பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமருடன் காணொலி காட்சி வழியே நாளை (4ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் நாளை (4ந்தேதி) காணொலி காட்சி வழியே முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.  இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 2004ம் ஆண்டில் இருந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து உயர்மட்ட அளவிலான நட்புறவை கொண்டுள்ளது.

உயர்மட்ட அளவிலான முக்கிய விசயங்களை சீராக பரிமாறி கொள்ளுதல் மற்றும் பல்வேறு துறைகளிலும் வளர்ந்து வரும் ஒருங்கிணைப்புகளால் அவை அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன.

அடுத்த 10 ஆண்டுகளுக்கு, இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து விரிவாக்கம் அடையவும் மற்றும் வலுப்படவும் ஏற்ற வழியை ஏற்படுத்தும் வகையில் ஒரு விரிவான திட்ட அறிக்கை 2030 வெளியிடப்படும்.

இவற்றில், மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புப்படுத்தி கொள்ளுதல், வர்த்தகம் மற்றும் வளம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பருவநிலை செயல்பாடு மற்றும் சுகாதார நலம் ஆகிய 5 முக்கிய விசயங்கள் இடம் பெறும் என தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. தபால் வாக்கு அளிக்க இருப்போர் வாய்ப்பை தவறவிட்டால் சட்டசபை தேர்தலில் ஓட்டு போட முடியாது தேர்தல் அலுவலர் அறிவிப்பு
தபால் வாக்கு அளிக்க இருப்போர் வாய்ப்பை தவறவிட்டால், சட்டசபை தேர்தலில் ஓட்டு போட முடியாது என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
2. சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து ஆலோசனை
வாக்குப்பதிவு, எண்ணிக்கையின்போது சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார்.
3. பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
ஸ்ரீவில்லிபுத்தூர் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து இன்று முதல்-அமைச்சர் பிரசாரம் செய்கிறார். அவரது பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.
4. சர்வதேச நெருக்கடி சூழல் பற்றி அமெரிக்க பாதுகாப்பு மந்திரியுடன் ஆலோசனை: எஸ். ஜெய்சங்கர்
சர்வதேச நெருக்கடி சூழல் பற்றி அமெரிக்க பாதுகாப்பு மந்திரியுடன் விரிவான அளவில் ஆலோசனை நடத்தப்பட்டது என மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
5. 'நமது சமுதாய வேட்பாளர்கள் வெற்றி பெற பணியாற்றுவோம்' நாடார் சமுதாய அரசியல் உரிமை அமைப்பு அறிவிப்பு
ஆவடி, பெரம்பூர், விருகம்பாக்கம் உள்பட 12 தொகுதிகளில் நாடார் சமுதாய வேட்பாளர்கள் வெற்றி பெற பணியாற்றுவோம் என்று நாடார் சமுதாய அர சியல் உரிமைஅமைப்பு அறிவித்துள்ளது.