மாநில செய்திகள்

அண்ணா, கருணாநிதியின் வழிநின்று சிறப்பான ஆட்சியை தருவோம் - திமுக தலைவர் ஸ்டாலின் + "||" + Anna, we will give better rule through Karunanidhi Stalin

அண்ணா, கருணாநிதியின் வழிநின்று சிறப்பான ஆட்சியை தருவோம் - திமுக தலைவர் ஸ்டாலின்

அண்ணா, கருணாநிதியின் வழிநின்று சிறப்பான ஆட்சியை தருவோம் - திமுக தலைவர் ஸ்டாலின்
அண்ணா, கருணாநிதியின் வழிநின்று சிறப்பான ஆட்சியை தருவோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை,

கருணாநிதி நினைவிடத்தில் கொளத்தூர் தொகுதியின் வெற்றி சான்றிதழை சமர்ப்பித்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

, "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என ஏற்று நடப்போம். தமிழக மக்கள் வழங்கியுள்ள மகத்தான வெற்றிக்கு வழிவகுத்து தந்துள்ளவர்களுக்கு நன்றி எந்த எதிர்பார்ப்போடு வெற்றியை தந்தார்களோ அந்த நம்பிக்கைக்கு ஏற்ப திமுக ஆட்சி நிறைவேற்றுவோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்போம். 

அண்ணா, கருணாநிதியின் வழிநின்று சிறப்பான ஆட்சியை தருவோம். தமிழகம் பாதாளத்திற்கு சென்றுள்ளதை புரிந்து திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளீர்கள். திமுகவுக்கு வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவோம். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சி பொறுப்பேற்ற பின் படிப்படியாக நிறைவேற்றுவோம்

இன்னும் முழுமையாக சில தொகுதிகளில் வெற்றி நிலவரம் வராததால் வந்தவுடன் பதவியேற்பு இருக்கும். செவ்வாயன்று திமுக எம்.எல்.ஏ கூட்டம் நடைபெறும். பதவியேற்பு விழா ஆடம்பர விழாவாக இல்லாமல் மிகவும் எளிமையாகவே இருக்கும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஆளுநர் மாளிகையிலேயே தனது பதவியேற்பு விழா நடைபெறும். மே 4ஆம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும். தேசிய தலைவர்களின் அறிவுரை கேட்டு செயல்படுவேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக வேட்பாளர் பட்டியலை வைத்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் திமுக வேட்பாளர் பட்டியலை வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
2. அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை
தனது 68வது பிறந்தநாளையொட்டி அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.