தேசிய செய்திகள்

மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் + "||" + Mysterious persons attack the car of candidate who contested against Mamata Banerjee

மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியின் கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹல்டியா,

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 2ல்) நடைபெற்றது.  இதில், நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனினும், நந்திகிராம் தொகுதிக்கான முடிவுகள் அறிவிப்பில் சில குளறுபடிகள் நடந்துள்ளன என்று எனக்கு தகவல்கள் வந்துள்ளன என்று மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு கூறினார்.

தொடர்ந்து தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ணும்படி அவர் கடிதமும் எழுதினார்.

நந்திகிராம் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளரான சுவேந்து அதிகாரி டுவிட்டர் வழியே, நந்திகிராம் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.  இதனை தொடர்ந்து அவரது பாதுகாப்பு வாகனம் ஒன்றின் மீது ஹல்டியா நகரில் வைத்து மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதுதவிர்த்து, செய்தி சேகரிக்க சென்ற ஊடகக்காரர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அதிவிரைவு படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தாக்குதலில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டி நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கும் நிகழ்ச்சி தொடக்கம்
கொரோனா தாக்குதலில் இருந்து உலக மக்கள் விடுபட வேண்டியும், உலக நன்மை வேண்டியும் நாலாயிர திவ்விய பிரபந்தம் வாசிக்கும் நிகழ்வு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் குலசேகர ஆழ்வார் ராமானுஜர் கூடத்தில் நடந்தது.
2. ஏமனில் ஈரான் சரக்கு கப்பல் மீது தாக்குதல்
ஏமன் நாட்டில் செங்கடல் பகுதியில் ஈரான் அரசுக்கு சொந்தமான எம்.வி.சாவிஸ் என்கிற சரக்கு கப்பல் கடந்த 4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது.
3. நைஜீரியாவில் சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 1,800 கைதிகள் தப்பி ஓட்டம்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
4. பாகிஸ்தானில் 100 ஆண்டு பழமையான இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
பாகிஸ்தானில் புதுப்பிக்கப்பட்டு வந்த 100 ஆண்டு பழமையான இந்து கோவில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
5. 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் கருத்து: தமிழக மாணவர்கள் மீது நடத்திய நேரடி தாக்குதல்
7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான பா.ஜ.க. அரசின் கருத்து: தமிழக மாணவர்கள் மீது நடத்திய நேரடி தாக்குதல் கே.எஸ். அழகிரி கருத்து.