தேசிய செய்திகள்

திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங். வெற்றி + "||" + Andhra Pradesh bypoll | YSR Congress wins Tirupati (SC) Lok Sabha constituency

திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங். வெற்றி

திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங். வெற்றி
ஆந்திர மாநிலம் திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
திருப்பதி,

ஆந்திர மாநிலம் திருப்பதி மக்களவைத் தொகுதி எம்.பியான பல்லி துர்காபிரசாத் ( ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்)  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். அவரது மறைவையடுத்து காலியாக இருந்த திருப்பதி மக்களவை தொகுதிக்கு  கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.  இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. 

இதில் அம்மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளார் டாக்டர் குருமூர்த்தி 6,24,748 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தெலுங்கு தேசம் வேட்பாளரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பனபாக லட்சுமியை (3,53,642) 2,71,106 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

பாஜக வேட்பாளரும் கர்நாடக முன்னாள் தலைமைச் செயலாளருமான ரத்னபிரபா 56,992 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தை வகித்தார். காங்கிரஸ் வேட்பாளர் சிந்தா மோகன் 9,559 வாக்குகளும் சிபிஎம் வேட்பாளர் 5,966 வாக்குகளும் பெற்றனர்.