தேசிய செய்திகள்

இங். பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை + "||" + PM Modi To Hold Virtual Summit With Boris Johnson Tomorrow

இங். பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

இங். பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை
இங்கிலாந்து பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் காணொலி வாயிலாக நாளை (மே 4) பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுடெல்லி,

இங்கிலாந்து  பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் காணொலி வாயிலாக நாளை (மே 4)  பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.   இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவா்களின் ஆலோசனை உதவும் என அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: 

பிரதமா் மோடி மற்றும்  இங்கிலாந்து பிரதமரிடையே  மே 4 ஆம் தேதி நடைபெறும்  மெய்நிகர் மாநாட்டில், 'விரிவான செயல் திட்டம் 2030' என்ற 10 ஆண்டு ஒத்துழைப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்த 5 துறைகளில் இந்தியா -  இங்கிலாந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த உதவும். 

வா்த்தகம் மற்றும் முன்னேற்றம், ராணுவம் மற்றும் பாதுகாப்பு, பருவநிலை மேம்பாட்டு நடவடிக்கை மற்றும் சுகாதரம் ஆகிய துறைகளில் இரு நாட்டு உறவை வலுப்படுத்த உதவும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து  பிரதமா் போரிஸ் ஜான்சன் கடந்த மாதம் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தாா். ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில், அவா் தனது இந்திய பயணத்தை ரத்து செய்தது நினைவுகூரத்தக்கது. 


தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து 'கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம்'
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனாவை தோற்கடிக்க இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
2. மக்களுடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும் கொரோனா சூழல் தொடர்பான கருத்துகளை மக்களிடம் கேட்டறியுங்கள் - மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
மக்களுடன் தொடர்பிலேயே இருக்குமாறும், கொரோனா சூழல் குறித்து அவர்களிடம் கருத்துகளை கேட்டறியுமாறும் மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
3. “மிசோரம் காட்டுத்தீயை அணைக்க அனைத்து விதங்களிலும் உதவுவோம்”; பிரதமர் மோடி உறுதி
மிசோரம் மாநில முதல்-மந்திரி சோரம்தங்காவிடம், பிரதமர் நரேந்திரமோடி நேற்று தொடர்பு கொண்டு பேசினார்.
4. தடுப்பூசி தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்: பிரதமர் மோடி
தற்போது அமலில் இருக்கும் இலவச தடுப்பூசி திட்டம் இனி வரும் காலங்களிலும் தொடரும் என பிரதமர் மோடி கூறினார்.
5. இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார்.