தேசிய செய்திகள்

புதுச்சேரி மக்களுக்கு நன்றி... இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் - மத்திய அமைச்சர் அமித் ஷா + "||" + Thanks to the people of Pondicherry ... no more corruption, development administration - Union Minister Amit Shah

புதுச்சேரி மக்களுக்கு நன்றி... இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் - மத்திய அமைச்சர் அமித் ஷா

புதுச்சேரி மக்களுக்கு நன்றி... இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் - மத்திய அமைச்சர் அமித் ஷா
புதுச்சேரி மக்களுக்கு நன்றி என்றும், புதுச்சேரி இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் சார்ந்த அரசுக்கு சாட்சியாக விளங்கும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் 16 இடங்களிலும், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், சுயேச்சைகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்படி  4-வது முறையாக ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆகிறார்.

இந்நிலையில் புதுச்சேரி மக்களுக்கு நன்றி என்றும், புதுச்சேரி இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் சார்ந்த அரசுக்கு சாட்சியாக விளங்கும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இந்த எழில்மிகு மாநிலத்திற்கு சேவை செய்ய தே.ஜ.கூட்டணியை தேர்ந்தெடுத்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி. இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி மீதும், தே.ஜ.கூட்டணி வளர்ச்சி அரசியல் மீதும் உள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. புதுச்சேரி இனி ஊழலற்ற, வளர்ச்சி சார்ந்த அரசுக்கு சாட்சியாக விளங்கும்”.

“இந்த அபார வெற்றிக்கு ஜே.பி.நட்டா, சாமிநாதன், மற்றும் புதுச்சேரி பா.ஜ.க.வின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள். பாஜகவின் ஒவ்வொரு நிர்வாகியும் புதுச்சேரியின் பெருமையை மீட்டெடுக்கவும், மாநில மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பாடுபடுவார்கள்” என்று அமித் ஷா பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுவையில் என்.ஆர்.காங்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி; வாக்கு எண்ணிக்கை முடிவில் 16 தொகுதிகளில் வெற்றி
புதுவை சட்டமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு 8 இடங்களே கிடைத்தன.
2. புதுச்சேரியில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி
புதுச்சேரியில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வியை தழுவியது. ஒரு இடம் கூட கிடைக்காததால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
3. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வெற்றி; மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து கொண்டார்.
4. புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? தேர்தலுக்கு பிந்தைய தந்தி டி.வி. கருத்து கணிப்பு முடிவுகள்
புதுச்சேரியில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது குறித்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை தந்தி டி.வி. வெளியிட்டுள்ளது.
5. புதுவையில் தேர்தல் வெற்றி பேரணிக்கு தடை; ஊரடங்கு கட்டுப்பாடுகள் 3-ந்தேதி வரை நீட்டிப்பு; மதுக்கடைகளும் மூடப்படும்
புதுச்சேரியில் தேர்தல் வெற்றி பேரணிக்கு தடை விதிப்பதுடன், வருகிற 3-ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும். மதுக்கடைகளும் மூடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.