தேசிய செய்திகள்

பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிப்பு + "||" + Covid Negative Report Must To Enter Punjab; Bars, Gyms Shut In New Curbs

பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிப்பு

பஞ்சாப் மாநிலம்  வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அறிவிப்பு
பஞ்சாப் மாநிலம் வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அமிர்தசரஸ்,

பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பஞ்சாப் மாநிலத்திற்குள் வரும் பயணிகள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது அவசியம் ஆகும். 

சினிமா திரையரங்குகள் மூடப்படும், உணவு விடுதிகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் வரும் மே 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பஞ்சாப்பில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் தீவிரமாக உள்ளது.  மாநிலத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 



தொடர்புடைய செய்திகள்

1. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,673 பேருக்கு கொரோனா
பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,316 ஆக உயர்ந்துள்ளது.
2. பஞ்சாப் மாநிலத்தில் புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 59 பேர் பலி
பஞ்சாப் மாநிலத்தில் நேற்று புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
3. பெயர் மாற்றம் பஞ்சாப் அணிக்கு பேரின்பம் அளிக்குமா?
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி தொடங்கி மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, ஆமதாபாத், கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகிறது.
4. பஞ்சாபில் புதிதாக 2,820- பேருக்கு கொரோனா
பஞ்சாப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 2,820- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. பஞ்சாப்: சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
பஞ்சாப்பில் சொகுசு கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.