சட்டசபை தேர்தல் - 2021

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.. வாக்களித்த மக்களுக்கு நன்றி - கமல்ஹாசன் + "||" + We accept the verdict of the people .. Thank you to the people who voted - Kamalhasan

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.. வாக்களித்த மக்களுக்கு நன்றி - கமல்ஹாசன்

மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.. வாக்களித்த மக்களுக்கு நன்றி - கமல்ஹாசன்
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,  

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அரியணையைக் கைப்பற்றியுள்ளது.

இதனிடையே கோவைத்தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 51,481 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். 

இந்நிலையில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள்”.

'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்” என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. மின்சார வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி கிராம மக்கள் மறியல்
மின்சார வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியானார். இதையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2. தமிழகத்தில் அடுத்தகட்டமாக ஆன்மிக தலங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி
தமிழகத்தில் அடுத்தகட்டமாக ஆன்மிக தலங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3. தடுப்பூசிக்காக வந்து ஏமாறும் மக்கள்
தடுப்பூசிக்காக வந்து ஏமாறும் மக்கள்
4. சென்னை ஐ.ஐ.டி. இடஒதுக்கீடு பிரச்சினை விவகாரம்: சமூகநீதி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்
சென்னை ஐ.ஐ.டி. இடஒதுக்கீடு பிரச்சினை விவகாரம்: சமூகநீதி மக்கள் இயக்கம் ஆர்ப்பாட்டம்.
5. உலக மக்கள் தொகை தினம்
1989-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ந் தேதி உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது.