சட்டசபை தேர்தல் - 2021

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு + "||" + AIADMK candidate Vijayabaskar has won the Viralimalai assembly constituency

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விராலிமலை,

சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அரியணையைக் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் சி.விஜயபாஸ்கர் திமுக வேட்பாளராக பழனியப்பனை விட 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை 3 முறை நிறுத்தப்பட்டதால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. அதில் 5 தொகுதியில் தோல்வியைத் தழுவிய நிலையில் விராலிமலை தொகுதியில் மட்டும் விஜயபாஸ்கர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. விராலிமலை அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் தி.மு.க.வேட்பாளர் பழனியப்பன் வாக்குறுதி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் விராலிமலை பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது.
2. மேம்பாலம் அமைத்து தருவேன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி
சரவணம்பட்டி கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம் பாலம் அமைத்து தருவேன் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பையா கவுண்டர் வாக்குறுதி.
3. மீண்டும் ஆதரவு தாருங்கள் விராலிமலை மேற்கு ஒன்றிய பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம்
10 ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு உதவிய எனக்கு ஆதரவு தாருங்கள் என்று விராலிமலை மேற்கு ஒன்றிய பகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பிரசாரம் மேற்கொண்டார்.
4. விராலிமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தி.மு.க.முதன்மை செயலாளர் கே.என்.நேரு பங்கேற்பு
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் தி.மு.க.முதன்மை செயலாளர் கே.என்.நேரு பங்கேற்பு
5. சென்னை புறநகர் பகுதியில் வேட்பாளர்கள் மனு தாக்கல்
சென்னை புறநகர் பகுதியில் உள்ள காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.