தேசிய செய்திகள்

அசாமில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி.. அடுத்த முதல்வர் யார்..? + "||" + Assam elections: BJP silent on CAA, chose to focus on schemes and target AIUDF

அசாமில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி.. அடுத்த முதல்வர் யார்..?

அசாமில் மீண்டும் பா.ஜனதா கூட்டணி  ஆட்சி.. அடுத்த முதல்வர் யார்..?
அசாமில் ஆளும் பா.ஜனதா கூட்டணி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளத;முதல்வா் வேட்பாளர் போட்டி சா்வானந்த சோனோவால் மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய இருவரும் உள்ளனர்.
கவுகாத்தி

அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி ஏப். 6-ஆம் தேதி வரை 3 கட்டங்களாகத் தோ்தல் நடைபெற்றது. ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகள் மற்றும் சிஏஏவுக்கு எதிரான மக்களின் மனநிலையை சமாளித்து ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது பா.ஜனதா கூட்டணி. மஜுலி தொகுதியில் போட்டியிட்ட முதல்வா் சா்வானந்த சோனோவால் 43,192 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ராஜீவ் லோச்சனை வென்றாா்.

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை விட பா.ஜனதா  முன்னிலையில் இருந்து வந்தது. இறுதியில் 70-க்கும் அதிகமான தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி முன்னிலை பெற்றது. அடுத்த முதல்வா் யாா் என கட்சித் தலைமை முடிவு செய்யும் என முதல்வா் சா்வானந்த சோனோவால் தெரிவித்தாா்.

முதல்வா் வேட்பாளர் போட்டி சா்வானந்த சோனோவால் மற்றும் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகிய இருவரும் உள்ளனர்.

தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவா் ரிபுன் போரா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் ரங்கசாமிதான் முதலமைச்சர் ; போட்டியில்லை -பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் ரங்கசாமிதான் முதலமைச்சர் பதவிக்கு பாஜக போட்டியில்லை என்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்துள்ளார்.
2. அசாம்: 4 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது - தேர்தல் ஆணையம்
அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் நேற்று அமைதியான முறையில் மறுவாக்குப்பதிவு நடைபெறதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
3. அசாம்: 4 வாக்குச்சாவடிகளில் வரும் 20-ம் தேதி மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அசாமில் 4 வாக்குச்சாவடிகளில் வரும் 20-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
4. பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்று அச்சம்: அசாம் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை ராஜஸ்தானுக்கு அனுப்பிவைத்த காங்கிரஸ்
பாஜக குதிரை பேர முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவி வருவதால் அசாம் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
5. அசாம்: 90 வாக்காளர்களே உள்ள வாக்குசாவடி ; 171 வாக்குகள் பதிவு தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட்
அசாமில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்களே இருந்த நிலையில், 171 வாக்குகள் பதிவானதால் தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.