தேசிய செய்திகள்

ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை தொடரும் ஆதார் பூனவல்லா சொல்கிறார் + "||" + Dose shortage to go on till July: Adar Poonawalla

ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை தொடரும் ஆதார் பூனவல்லா சொல்கிறார்

ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை தொடரும் ஆதார் பூனவல்லா சொல்கிறார்
இந்தியாவில், அடுத்த சில மாதங்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
லண்டன்

கொரோனா  இரண்டாவது அலையில் தடுப்பூசி பற்றாக்குறைக்கு இந்தியா போராடுகையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா, ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை தொடரும் என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் லண்டனில் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு  பேட்டி அளித்த   ஆதார் பூனவல்லா கூறியதாவது:-

தற்போது மாதம் ஒன்றுக்கு தனது நிறுவனம் 6 முதல் 7 கோடி தடுப்பூசி டோசுகளை மட்டுமே தயாரித்து வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.வரும் ஜூலை மாதம் அது 10 கோடியாக உயர்த்தப்பட்ட பின்னர் தடுப்பூசி தட்டுப்பாடு நீங்கும்.

ஜனவரி மாதம் புதிய கொரோனா பாதிப்புகள்  குறைந்துவிட்ட நிலையில், இரண்டாவது அலையைஅதிகாரிகள் எதிர்பார்க்கவில்லை.

தடுப்பூசி பற்றாக்குறை குறித்து அரசியல்வாதிகள் மற்றும் விமர்சகர்களால் நான் மிகவும் அநியாயமாகவும் தவறாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் நோக்கத்துடன், சீரம் இந்தியா நிறுவனத்திற்கு மத்திய அரசு 3000 கோடி முன்பணத்துடன் கடந்த மாதம் ஆர்டர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது ; விநியோக கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருக்க வேண்டும் -சுப்ரீம் கோர்ட்
தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது; தடுப்பூசி விநியோக கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.
2. கொரோனா பரவலைத் தடுக்க 200 கிராமங்களுக்கு சீல்!
கொரோனா பரவலைத் தடுக்க மத்திய பிரதேசத்தில் 200 கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
3. நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவது சந்தேகமே -தமிழக சுகாதாரத்துறை செயலாளர்
18 வயது க்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து வந்தால்தான் தடுப்பூசி செலுத்த முடியும் என தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் தெரிவித்து உள்ளார்.
4. தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாகும்
தடுப்பூசி பற்றாக்குறையால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
5. மாநிலங்களில் ஒரு கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் இருப்பு உள்ளது- மத்திய சுகாதார அமைச்சகம்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 16 கோடியே 16 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.