மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்கு நன்றி: மு.க ஸ்டாலின் டுவிட் + "||" + Thanks for the greeting Edappadi Palanisamy: MK Stalin's tweet

எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்கு நன்றி: மு.க ஸ்டாலின் டுவிட்

எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துக்கு நன்றி: மு.க ஸ்டாலின் டுவிட்
மிகச்சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை என எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட டுவிட் பதிவில் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள மு.க,ஸ்டாலின், 'மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி  அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!,' என்று தெரிவித்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

1. தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2. மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் - மு.க ஸ்டாலின் பேட்டி
மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என வாக்களித்த பின்பு மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
3. மிரட்டலுக்கு பயந்து பணிந்து செல்ல நாங்கள் அதிமுக அல்ல - ஸ்டாலின் டுவிட்
மக்களிடம் ஆதரவில்லை; படுதோல்வி உறுதி என்ற நிலையில் வழக்கம் போல பாஜக தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது என மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
4. திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
5. சர்வதேச மகளிர் தினம்: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.