மாநில செய்திகள்

நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை + "||" + One side of the coin of administration is the ruling party, the other side is the opposition - the OPS-EPS joint statement

நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை

நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி - ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை
அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சென்னை,  

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன்படி தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். 

இதற்கிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அதிமுக கூட்டணி வெல்லாத நிலையில், முதல்வர்  பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் ஆளுங்கட்சி, மற்றொரு பக்கம் எதிர்க்கட்சி. ஆட்சித்தேர் சரியாக செழுத்த அச்சாணியாக செயல்பட வேண்டிய கடமை இருக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற பெரும் பொறுப்புடன் அதிமுக பணியாற்றும். 

10 ஆண்டுகள் அதிமுக அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு செய்த பணிகளை மக்கள் நன்கு அறிவார்கள். அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி” என்று அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சீர்காழியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி தீவிரம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
சீர்காழியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு நகராட்சி நிர்வாகம் சார்பில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்தது.
2. வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே பாதுகாப்பு கமிஷனரின் ஆய்வு பணி நிறைவு விரைவில் ரெயில் இயக்க மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை
வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் விம்கோ நகர் இடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயிலை ஓட்டி பார்த்து ஆய்வுபணியை நேற்றுடன் பாதுகாப்பு கமிஷனர் நிறைவு செய்தார். இந்த பாதையில் விரைவில் ரெயிலை இயக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
3. திருப்போரூர் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா ரத்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருப்போரூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதிரொலியாக சூரசம்ஹார விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தடை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அதிரடி
காரைக்காலில் அதிக சத்தத்தை எழுப்பும் பட்டாகளை வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் தெரிவித்தார்.