தேசிய செய்திகள்

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை + "||" + Supreme Court begins hearing Election Commission's plea challenging Madras HC order wherein it criticized the poll panel for failure to maintain COVID-19

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை

கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை
கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என ஐகோர்ட் கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,

கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு விதிகள் முழுமையாக பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடுகளை செய்யக்கோரி முன்னாள் அமைச்சரும், கரூர் அ.தி.மு.க வேட்பாளருமான விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், ‘கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யாமல், சமூக இடைவெளியின்றி அரசியல் கட்சிகளை இஷ்டம் போல் பிரசாரம் செய்ய அனுமதித்ததே தொற்று பரவலுக்கான காரணம். இதற்காக தேர்தல் கமிஷன் மீது கொலை வழக்கு சுமத்தினாலும் தவறில்லை’ என கடும் கண்டனம் தெரிவித்தனர்.

கொரோனா பரவல் தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரனை இன்று நடைபெற்றது.

அப்போது கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் அந்த தவறை சரிசெய்ய முயலுங்கள். உள்நோக்கத்துடன் ஐகோர்ட்  கருத்து கூறவில்லை, கருத்துக்களை சரியான முறையில் எடுத்துக்கொள்ளுங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பீகார்: கங்கை நதியில் மிதந்து வந்த 71 உடல்கள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களா?
பீகாரில் கங்கை நதியில் நதியில் மிதந்து வந்த பல உடல்கள் உரிய மரியாதையுடன் புதைக்கப்பட்டன
2. உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்
உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
3. அதிகரிக்கும் கொரோனா: தெலங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு!
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் தெலங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது
4. கொரோனா பாதிப்பு: டுவிட்டர் இந்தியாவுக்கு ரூ. 110 கோடி நிதியுதவி
கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.
5. இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் பரவிவரும் பி-1617 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிப்பதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.