கிரிக்கெட்

வீரர்கள் இருவருக்கு கொரோனா; இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு? + "||" + IPL 2021: Varun, Sandeep test positive for COVID-19, RCB wary of playing KKR on Monday night

வீரர்கள் இருவருக்கு கொரோனா; இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு?

வீரர்கள் இருவருக்கு கொரோனா;  இன்றைய ஐபிஎல் போட்டி ஒத்திவைப்பு?
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடும் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த  சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.  

கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக பிசிசிஐ அதிகாரி கூறியதாக ஏ.என்.ஐ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.  எனினும், இதுபற்றி பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் தாலுகா அளவில் கொரோனா சிகிச்சை மையங்கள்; போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
கர்நாடகத்தில் தாலுகா அளவில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்று போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
2. கொரோனாவை கட்டுப்படுத்த நாளை மறுதினம் முதல் ஒடிசாவில் 14 நாட்கள் பொதுமுடக்கம்
ஒடிசாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாளை மறுதினம் முதல் 14 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களில் முழு அடைப்பும் அமலாகிறது.
3. மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்; மராட்டிய அரசு உத்தரவு
மேற்கு வங்காளம், உத்தரபிரதேசத்தில் இருந்து மராட்டியத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது.
4. 18-45 வயதுடைய 59 கோடி பேருக்கு செலுத்த 122 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
நாட்டில் 18-45 வயதுடைய 59 கோடி பேருக்கு செலுத்த 122 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5. அமெரிக்காவில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.‌ கொரோனா உயிரிழப்பிலும் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.