மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுடன் தலைமைச்செயலாளர் சந்திப்பு + "||" + Chief Secretary meets MK Stalin, who is to take over as the Chief Minister of Tamil Nadu

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுடன் தலைமைச்செயலாளர் சந்திப்பு

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினுடன் தலைமைச்செயலாளர் சந்திப்பு
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை, 

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன்படி தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.  

இந்நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணனும் பங்கேற்றுள்ளார். பதவியேற்பு நிகழ்ச்சி தொடர்பாகவும், கொரோனா பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலினுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

1. தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி மு.க.ஸ்டாலின் அறிக்கை
‘தி.மு.க. வென்றது, அதை தமிழகம் இன்று சொன்னது. தமிழகம் இனி வெல்லும் அதை நாளைய தமிழகம் சொல்லும்' என்று மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
2. ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு முழுமையாக வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழகத்தின் தேவைக்கு முழுமையாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
3. புதிய கல்வி கொள்கை மொழிபெயர்ப்பில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழை புறக்கணிப்பதா? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
‘புதிய கல்வி கொள்கை மொழிபெயர்ப்பில் தமிழை புறக்கணிப்பதா?’, என மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. மு.க.ஸ்டாலின் உடன், தி.மு.க. வேட்பாளர்கள் 120 பேர் சந்திப்பு; 3-வது நாளாக இன்றும் நடக்கிறது; தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து நேரில் விளக்கம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில், அக்கட்சி வேட்பாளர்கள் 120 பேர் நேற்று சந்தித்தனர். அப்போது தேர்தலில் தங்கள் தொகுதியில் இருக்கும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
5. ‘234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்'; மு.க.ஸ்டாலின் உறுதி
தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் கி.மீ. தூரம் சுற்றி வந்திருக்கிறேன். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று உதயநிதியை ஆதரித்து வாக்கு கேட்டபோது மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.