சட்டசபை தேர்தல் - 2021

தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் + "||" + Report to the Governor this evening regarding the election results - Chief Electoral Officer of Tamil Nadu Satyaprada Saku informed

தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை, 

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. 234 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து வரும் 7 ஆம் தேதி தமிழக முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.  

சட்டமன்ற பெரும்பான்மைக்கு 118  தொகுதிகள் தேவை என்ற நிலையில் தற்போதைய நிலவரப்படி திமுக மட்டுமே 125 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. 

இந்நிலையில் தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை சமர்பிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் எந்த இடத்திலும் மறு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக கோரிக்கை வரவில்லை. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் முடிவு தொடர்பாக ஆளுநருக்கு இன்று மாலை அறிக்கை சமர்பிக்கப்படும். எம்.பி.க்களாக உள்ள கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு
தமிழக சட்டசபை பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.
2. கொரோனா அச்சம்: மீரட்டில் 280 கைதிகளை ஜாமீனில் விடுவிக்க முடிவு
கொரோனா அச்சம் எதிரொலியாக மீரட் சிறையில் இருந்து 280 கைதிகளை ஜாமீன் அல்லது பரோலில் விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
3. இந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் முடிவு
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார்.
4. கர்நாடகாவில் 12ம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க அரசு முடிவு
கர்நாடகாவில் 11ம் வகுப்பு மாணவர்களை நேரடியாக 12ம் வகுப்புக்கு தரம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
5. நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு
நியூசிலாந்து பிரதமர் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்துள்ளார்.