தேசிய செய்திகள்

ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிப்பு + "||" + Andhra Pradesh: From May 5, curfew to be imposed from 12 pm to 6 am Andhra Pradesh Police

ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிப்பு

ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிப்பு
ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத்

ஆந்திராவில் நேற்று மட்டும்  23,920 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, கொரோனா காரணமாக 83 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 11 லட்சம் கொரோனா பாதிப்புகள்  பதிவாகியுள்ளன, அவற்றில் 9,90,813 குணப்படுத்தப்பட்டு வீடு திரும்பி உள்ளனர். 

1.4 லட்சம் பாதிப்புகள் கொண்ட கிழக்கு கோதாவரி, 1.2 லட்சம்  பாதிப்புகள்  கொண்ட சித்தூரும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொற்றுநோய்களைக் கொண்ட மேற்கு கோதாவரியும் உள்ளன. 

இதை தொடர்ந்து ஆந்திராவில் கடந்த மாதம் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை அரசு விதித்தது.இந்த நிலையில் மீண்டு கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து, கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்தும் முயற்சியில் ஊரடங்கு நேரங்களை நீட்டிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று நோயை கட்டுபடுத்துவது தொடர்பாக் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று  மறுஆய்வுக் கூட்டம் நடிபெற்றது. இந்த கூட்டத்தில் போது, மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும், அதன் பிறகு அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா செய்திகளை ஒளிபரப்ப தடை கோரும் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
செய்தி சரியாக இருந்தால் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது கொரோனா செய்திகளை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் கோரும் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
2. கர்நாடகா: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலி - விசாரணைக்கு உத்தரவு
கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலியான விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
3. கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை
கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என ஐகோர்ட் கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
4. ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை தொடரும் ஆதார் பூனவல்லா சொல்கிறார்
இந்தியாவில், அடுத்த சில மாதங்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
5. தடுப்பூசி விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது ; விநியோக கட்டுப்பாடு மத்திய அரசிடம் இருக்க வேண்டும் -சுப்ரீம் கோர்ட்
தடுப்பூசியின் விலையை தனியார் நிறுவனங்கள் நிர்ணயிப்பதை ஏற்க முடியாது; தடுப்பூசி விநியோக கட்டுப்பாடு அனைத்தும் மத்திய அரசிடம் இருக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறி உள்ளது.