கிரிக்கெட்

கொல்கத்தா அணி வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Three CSK members test positive, then negative: BCCI needs to take a hard call on IPL

கொல்கத்தா அணி வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொல்கத்தா  அணி வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொல்கத்தா அணி 2 வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சென்னை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.  ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த  சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் கொரோனா பரிசோதனையில் மற்ற வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் ஒத்திவைக்கப்பட இருப்பதாக பிசிசிஐ அதிகாரி கூறியதாக ஏ.என்.ஐ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.  எனினும், இதுபற்றி பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்  அணியைச் சேர்ந்த மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இவர்களில் வீரர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. சென்னை அணியின்  தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை அணிக்கு 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்துள்ளது.
2. சென்னை சூப்பர் கிங்ஸ் சேர்மன் சபாரத்தினம் மரணம்
சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தின் சேர்மனும், இயக்குனருமான எல்.சபாரத்தினம் உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார்.
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஜடேஜாவின் அபார ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை துவம்சம் செய்து அவர்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
4. ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
5. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.