மாநில செய்திகள்

தலைமைச் செயலகத்தில் காலியாகும் அமைச்சர்கள் அறை : புதிய அமைச்சர்களுக்காக அறைகளை தயார் செய்யும் பணி தீவிரம் + "||" + The General Secretariat is vacant Ministers Room: Intensity of work to prepare rooms for new ministers

தலைமைச் செயலகத்தில் காலியாகும் அமைச்சர்கள் அறை : புதிய அமைச்சர்களுக்காக அறைகளை தயார் செய்யும் பணி தீவிரம்

தலைமைச் செயலகத்தில் காலியாகும் அமைச்சர்கள் அறை : புதிய அமைச்சர்களுக்காக அறைகளை தயார் செய்யும் பணி தீவிரம்
சென்னை தலைமைச் செயலகத்தில் காலியாகும் முன்னாள் அமைச்சர்கள் அறை : புதிய அமைச்சர்களுக்காக அறைகளை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சென்னை:

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்  திராவிட முன்னேற்றக் கழகம் அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தனித்து 125 இடங்களையும் உதய சூரியன் சின்னத்தில் 8 பேரில் வெற்றிப் பெற்ற நிலையில் 133 இடங்களை பெற்றுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றுள்ளது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 18 இடங்களையும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களையும், மதிமு, விசிக தலா 4 இடங்களையும், மற்ற கூட்டணிக்கட்சிகள் 4 இடங்களையும் பெற்றுள்ளது. 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால், சென்னை - தலைமைச் செயலகத்தில் முன்னாள் அமைச்சர்களின் அறைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு, சுத்தம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.

  முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சரகள் பயன்படுத்திய  அறைகளில் இருந்த ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு விட்டன.

அமைச்சர்கள் உள்ளிட்டோர் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வெளியே எடுத்துச்செல்லப்பட்டன.

அமைச்சர்கள் அறைகளின் வாசலில் இடம் பெற்றிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டு, அதில் பொறிக்கப்பட்டு இருந்த எழுத்துக்களும் அழிக்கப்பட்டு உள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறும் புதிய அமைச்சர்களுக்காக தலைமைச் செயலகத்தில் அறைகள் தயார் செய்யும் பணி, மற்றொரு பக்கம் முடுக்கி விடப்பட்டு உள்ளது.