தேசிய செய்திகள்

நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை அறிவிக்க வாய்ப்பில்லை -மத்திய அரசு + "||" + Central government is unlikely to declare a nationwide curfew

நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை அறிவிக்க வாய்ப்பில்லை -மத்திய அரசு

நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை அறிவிக்க வாய்ப்பில்லை  -மத்திய அரசு
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது . இந்த நிலையில் நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கம் உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள்  கொரோனா பாதிப்பு புதிய உச்சம் தொட்டு மக்களை கதி கலங்க வைத்தது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் ஊரடங்குக்கு நிகரான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.  

இந்த நிலையில்,  சற்று ஆறுதல் தரும் வகையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சீராக குறைந்து வருகிறது. நேற்று முன் தினம் 4.01 லட்சம், நேற்று 3.92 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 147- பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கவலை அளிக்கும் விஷயமாக தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 3,417 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 732 ஆக உள்ளது. 

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  1 கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 604- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,62,93,003- ஆக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 959- ஆக உள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 13 ஆயிரத்து 642- ஆகும். 

நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 71 லட்சத்து  98 ஆயிரத்து 207-  தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்தது. இந்த நிலையில் நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தாலும், அது பொருளாதார பாதிப்பு மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் வேலையிழப்புகளுக்கு காரணமாகி விடும் என மத்திய அரசு கருதுகிறது.

தொற்று பரவல் 15 விகிதத்திற்கும் அதிகமாக உள்ள சுமார் 150 மாவட்டங்களில் கடுமையான ஊரடங்கை கொண்டுவரலாம் என சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு சுகாதார அமைச்சகம் ஏற்கனவே அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. என்றாலும், கும்பமேளா போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள் சூப்பர்ஸ்பெரட்டர்களாக மாறி இரண்டு மற்றும் 3 ஆம் நிலை நகரங்களில் வைரஸ் தொற்றை பரப்பக்கூடும் என்ற அச்சமும் உருவாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிப்பு
ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
2. கொரோனா செய்திகளை ஒளிபரப்ப தடை கோரும் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
செய்தி சரியாக இருந்தால் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது கொரோனா செய்திகளை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் கோரும் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
3. கர்நாடகா: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலி - விசாரணைக்கு உத்தரவு
கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலியான விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
4. கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை
கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என ஐகோர்ட் கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.
5. ஜூலை வரை தடுப்பூசி பற்றாக்குறை தொடரும் ஆதார் பூனவல்லா சொல்கிறார்
இந்தியாவில், அடுத்த சில மாதங்களுக்கு தடுப்பூசி பற்றாக்குறை நிலவும் என சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.