மாநில செய்திகள்

மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை கேட்டு பெறுவோம் - வானதி சீனிவாசன் பேட்டி + "||" + We will ask for and receive the necessary assistance - Vanathi Srinivasan interview

மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை கேட்டு பெறுவோம் - வானதி சீனிவாசன் பேட்டி

மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை கேட்டு பெறுவோம் - வானதி சீனிவாசன் பேட்டி
மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை கேட்டு பெறுவோம் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை,

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் அந்த கட்சியின தலைவர் நடிகர் கமல்ஹாசன் போட்டியிட்டார். அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ஜனதா வேட்பாளராக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசனும், தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் போட்டியிட்டனர். இந்த நிலையில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் முதல் கட்டத்தில் கமல்ஹாசன் பின்னடைவில் இருந்தார். ஆனால் அதன் பின்னர் அவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். முதல் இடத்தில் கமல்ஹாசனும், 2-வது இடத்தில் வானதி சீனிவாசனும், 3-வது இடத்தில் மயூரா ஜெயக்குமாரும் இருந்தனர். அவர்களிடையே வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக இருந்தது. இதனால் கோவை தெற்கு தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று கடும் இழுபறி ஏற்பட்டது.

இந்த நிலையில் 20-வது சுற்றுக்கு மேல் வாக்கு எண்ணிக்கையின் போது 2-வது இடத்தில் இருந்த வானதி சீனிவாசன், கமல்ஹாசனை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறினார். ஆனாலும் தொடர்ந்து அவர்கள் இடையே கடும் போட்டி நிலவியது.

மொத்த சுற்றுகள் முடிவின் போது பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகளும், நடிகர் கமல்ஹாசன் 51,481 வாக்குகளும் பெற்றனர். இதனால் பா.ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசன் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கான சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது. தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார் 3-வது இடம் பிடித்தார்.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏவும் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:--

வாக்களித்த அனைவருக்கும் நன்றி. மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒத்துழைப்பை வழங்குவோம்.
மத்திய அரசிடம் இருந்து தேவையான உதவிகளை கேட்டு பெறுவோம். வெற்றி கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.