தேசிய செய்திகள்

மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பதவியேற்பு + "||" + Mamata Banerjee to take oath as Chief Minister on 5th May

மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பதவியேற்பு

மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பதவியேற்பு
மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி நாளை மறுநாள் பதவியேற்க உள்ளார்.
கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைத்துள்ளது. நடந்து முடிந்த மேற்குவங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக 77 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. சிபிம் கூட்டணி 1 தொகுதியையும், மற்றவை 1 தொகுதியையும் கைப்பற்றியுள்ளது. 

ஆட்சியை தக்க வைத்துள்ள மம்தா பானர்ஜி 3-வது முறையாக மேற்குவங்காள முதல்மந்திரி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், மேற்குவங்காள முதல்மந்திரியாக மம்தா பானர்ஜி எப்போது பதவியேற்பார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பதவியேற்பு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் பார்தா சாட்டர்ஜி கூறுகையில், மே 5-ம் தேதி (நாளை மறுநாள்) மம்தா பானர்ஜி மேற்குவங்காள முதல்மந்திரியாக பதவியேற்பார்’ என்றார். 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பதவியேற்பு விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. முதலில் கொரோனா வைரசை எதிர்த்து போராடுவோம் - மம்தா பானர்ஜி பேச்சு
கொரோனா வைரசை எதிர்த்து முதலில் போராடுவோம் என்று மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
2. நந்திகிராம் தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் - தேர்தல் ஆணையத்திடம் தி.காங்கிரஸ் வேண்டுகோள்
நந்திகிராம் தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை உடனடியாக மீண்டும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுகொள் விடுத்துள்ளது.
3. நந்திகிராம் தொகுதியில் 1,736 வாக்கு வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வி
நந்திகிராம் தொகுதியில் 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார்.
4. திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி: மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை உறுதி செய்துள்ளது.
5. நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை - திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்
நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.