மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை + "||" + Corona prevention work: General Secretary, Health Secretary consultation with DMK President MK Stalin

கொரோனா தடுப்பு பணிகள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள்:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலர், சுகாதாரத் துறை செயலர் ஆலோசனை
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தலைமைச் செயலாளர், சுகாதாரத் துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்.
சென்னை

தமிழகத்தில் கொரோனா பரவலின் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 153 ஆக உயர்ந்துள்ளது.

இதை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆலோசனைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள், திமுக தலைவர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்க எத்தகைய கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம் என ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆலோசனைக்குப் பிறகு புறப்பட்டுச் சென்ற, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், கொரோனா தொடர்பாகவே ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை அறிவிக்க வாய்ப்பில்லை -மத்திய அரசு
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து உள்ளது . இந்த நிலையில் நாடு தழுவிய கொரோனா ஊரடங்கை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
2. ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிப்பு
ஆந்திராவில் மே 5 முதல் மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
3. கொரோனா செய்திகளை ஒளிபரப்ப தடை கோரும் மனு டெல்லி ஐகோர்ட்டில் தள்ளுபடி
செய்தி சரியாக இருந்தால் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது கொரோனா செய்திகளை ஒளிபரப்ப கட்டுப்பாடுகள் கோரும் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
4. கர்நாடகா: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலி - விசாரணைக்கு உத்தரவு
கர்நாடகா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 24 நோயாளிகள் பலியான விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
5. கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் - சுப்ரீம் கோர்ட் அறிவுரை
கொரோனா பரவலுக்கு தேர்தல் ஆணையமே காரணம் என ஐகோர்ட் கூறினால் தவறை சரிசெய்ய முயலுங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தி உள்ளது.